அமெரிக்காவில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை..


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று


அமெரிக்காவில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரெஸ்னோ நகரை சேர்ந்த 41 வயதான தந்தை தன்னுடைய மகளை சிறு வயதில் இருந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 2009-ம் ஆண்டு மே முதல் 2013-ம் ஆண்டு மே வரை 4 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இப்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 23 வயது ஆன நிலையில், அவர் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அதை தொடர்ந்து அவளது தந்தையை கைது செய்த போலீசார் பிரெஸ்னோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி எட்வர்ட் சர்சியன் குற்றம் சாட்டப்பட்ட தந்தைக்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கடந்த மாதம் குற்றவாளி என அறிவித்த கோர்ட்டு நேற்று தண்டனை விபரத்தை அறிவித்தது. “குற்றவாளி சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்,” என்று நீதிபதி கூறிஉள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரம் தெரியவந்துவிடும் என்ற காரணத்திற்காக அவருடைய விபரங்கள் வெளியே தெரிவிக்கப்படவில்லை.
”என்னுடைய தந்தை என்னை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். நான் சிறுமியாக இருந்தபோது என்னால் எந்தஒரு எதிர்ப்பையும் தெரிவிக்கா முடியவில்லை, எந்த உதவியும் இல்லை. பாதுகாப்பு இல்லாமல் இருந்தேன். என்னுடைய வலி மற்றும் பாதிப்புக்கு ஒருநாளும் என்னுடைய தந்தை வருத்தம் அடைந்தது கிடையாது,” என்று பாதிக்கப்பட்ட பெண் நீதிபதியிடம் கூறிஉள்ளார்.
அமெரிக்காவில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை.. அமெரிக்காவில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை.. Reviewed by Madawala News on 10/23/2016 01:22:00 PM Rating: 5