புத்தளம்- தில்லையடி மாணவி பாத்திமா நதாவை நாமும் வாழ்த்துகிறோம்.



-பாறுக் ஷிஹான்

2016ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்  அடிப்படையில்  புத்தளம் தில்லையடி முஸ்லீம் மகா வித்தியாலய மாணவி முகுஷீன் பாத்திமா நதா  174 புள்ளிகளை  பெற்றுள்ளார்.

இவரது பெறுபேற்றின் படி மாவட்டத்தில் 14 ஆம் நிலையையும் பாடசாலையில் முதலாம் நிலையையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர்  தெரிவித்துள்ளார்.

முகுஷீன் றிபியானா தம்பதியின் சிரேஸ்டபுதல்வியான இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இஸ்மத் இனூன் அவர்களின் பேர்த்தியுமாவார்.
புத்தளம்- தில்லையடி மாணவி பாத்திமா நதாவை நாமும் வாழ்த்துகிறோம். புத்தளம்- தில்லையடி மாணவி பாத்திமா நதாவை நாமும் வாழ்த்துகிறோம். Reviewed by Madawala News on 10/27/2016 11:56:00 AM Rating: 5