Free Space

மாவனல்லை பதுரியா மாணவி 192 புள்ளிகளுடன் மாகாணத்தில் முதலிடம்...


புலமைப் பரிசில் பரீட்சையில் மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியில் 42மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும், மாணவி அஸ்கா 192 புள்ளிகளைப் பெற்று சப்ரகமுவ மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதாகவும் ஆரம்பப் பிரிவுப் பொறுப்பாசிரியர் எம்.ஏ.எம்.பிஸ்ரு தெரிவித்தார். 

2016ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு பதுரியா மத்திய கல்லூரியில் 226 மாணவ, மாணவிகள் தோற்றியதாகவும் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் உட்பட முதல் 10 இடங்களில் நாள்வர் பதுரியா மத்திய கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர்.
 
பாடசாலையின் இந்த அடைவுக்கு பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.நிஸ்தார் மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் அயறாத உழைப்பும், மாணவர்களின் முயற்சியுமே காரணமாகும் என்றும் தெரிவித்தார். 

தரம் ஐந்து வகுப்பாசிரியர்களான எம்.வை.மரியம் பீபி, எம்.யூ.ஸல்மா, எம்.வை.எச்.ஜென்னா, எஸ்.எச்.எஸ்.சுவைரியா, சீ.எஸ்.கே.ஹனிய்யா மற்றும் எம்.ஜே.எம்.ரஸ்ஸாக் ஆகியோரையும் இங்கு நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  
மாவனல்லை பதுரியா மாணவி 192 புள்ளிகளுடன் மாகாணத்தில் முதலிடம்... மாவனல்லை பதுரியா மாணவி 192 புள்ளிகளுடன் மாகாணத்தில் முதலிடம்... Reviewed by Madawala News on 10/05/2016 08:35:00 PM Rating: 5