2017 ஜனவரி 27 க்கு பின்னர் ஜனாதிபதி கடும் தீர்மானம் ! வெளியான செய்திக்கு மத்திய மாகாண ஆளுனர் ஜோதிட நிபுணர் நிலுகா ஏக்கநாயக்க பதில்


2017 ஜனவரி 27க்கு பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசென அவர்கள் கடும் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் ஜோஜிட கலை நிபுணரும் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் ஆஸ்தான ஜோதிடர் என கூறப்படுபவருமான மத்திய மாகாண ஆளுனர் நிலுகா ஏக்கநாயக்க அவர்கள் கூறியதாகவே வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் அவர் கருத்து வெளியிட்ட அவர் அவ்வாறு நான் குறிப்பிடவில்லை என குறிப்பிட்டுள்ள அதே வேளை சிலர் அவ்வாறு கூறியதை தானும் செவியுற்றதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்..

நான் அவ்வாறு கூறவில்லை ஆனால் நான் அறிந்த ஜோதிடத்தின் படி ஜனாதிபதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் சரியான நேரத்தில் சரியாக முடிவெடுப்பார்.

மேலும் நான்  ஜனாதிபதிக்கு ஒரே  ஒருமுறை ஜோதிடம் பார்த்துள்ளேன் அது ஜனாதிபதி தேர்தலுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னராகும்.ஆனால் அப்பொது  அவரினது எனக்கு தெரியாமலே தான் அவருக்கு ஜோதிடம் பார்த்துள்ளேன். அது ஜானதிபதியுடயதுப் என அமைச்சர் ராஜித மற்றும் அவரது மகனுமே என்னிடம் கூறினார்கள் பின்னரே அது ஜனாதிபதிக்கு நான் ஜோசியம் பார்த்துள்ளதை அறிந்துகொண்டேன் என குறிப்பிட்டார்.
2017 ஜனவரி 27 க்கு பின்னர் ஜனாதிபதி கடும் தீர்மானம் ! வெளியான செய்திக்கு மத்திய மாகாண ஆளுனர் ஜோதிட நிபுணர் நிலுகா ஏக்கநாயக்க பதில் 2017 ஜனவரி  27 க்கு பின்னர் ஜனாதிபதி கடும் தீர்மானம் ! வெளியான செய்திக்கு மத்திய மாகாண ஆளுனர் ஜோதிட நிபுணர் நிலுகா ஏக்கநாயக்க பதில் Reviewed by Madawala News on 10/15/2016 09:40:00 PM Rating: 5