Free Space

2020 வரை இந்த அரசை எவராலும் கவிழ்க்க முடியாது..


2020 வரை இந்த அரசை எவராலும் கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன குறிப்பிட்டார்.

மகஒய நீர்வழங்கள் திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (19) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரிலும் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ..

2020 வரை இந்த ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாது சிலர் ஆட்சியை கவிழ்ப்பதாக நாடு முழுவதும் கூறித்திரிகின்றனர்.அவை பகல் கனவு மாத்திரமே.இப்பொது நாட்டில் கருத்து கூறும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.இப்பொது அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை தூக்கிசெல்ல வெள்ளை வேன்கள் வராது. 2020 வரை இந்த அரசை யாராலும் கவிழ்க்க முடியாது நாம் அதன் பின்னர் நாம் எவ்வாறு பயணிப்பது தொடர்பில் தீர்மாணிப்போம் என குறிப்பிட்டார்.

2020 வரை இந்த அரசை எவராலும் கவிழ்க்க முடியாது.. 2020 வரை இந்த அரசை எவராலும் கவிழ்க்க முடியாது.. Reviewed by Madawala News on 10/19/2016 09:45:00 PM Rating: 5