Oceas

மியன்மாரில் மூன்றாவது நாளாக கலவரம்.. இதுவரை 24 பேர் கொல்லப்பட்டனர்.



மியன்மாரில் மூன்றாவது நாளாக இடம்பெற்று வரும் மோதல்களில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மியன்மார் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்படவர்களில் மியன்மார் பாதுகாப்பு பிரிவினர் எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் பெண்களும் குழந்தைகள வயதானவர்களும் அடங்குவதாக பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிக்கப்படுகிறது.

மியன்மார் தனது பங்களாதேஷ் எல்லையை ஒட்டிய முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்திற்கு இராணுவத்தை அனுப்பியுள்ளதோடு அங்கு நான்கு பொலிஸாரை கொலை செய்த ஆயுததாரிகளை பிடிக்க தீவிர தேடுதலை ஆரம்பித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெவ்வேறு மூன்று தாக்குதல்களின் பின்னணியில் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்களின் கிளர்ச்சிக் குழு  இருப்பதாக மியன்மார் அதிகாரிகள் அறிவித்ததுடன், ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை  எல்லை காவல் படையினர் கைப்பற்றி உள்ளனர்.

இந்த தாக்குதல்களில் ஒன்பது பொலிஸார் கொல்லப்படடு ஐவர் காயமடைந்தனர். மேலும் ஒரு பொலிஸார் காணாமல் போனார். இதில் எட்டு தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டு மேலும் இருவர் பிடிபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மியன்மாரின் பெரும்பாலும் நாடற்ற நிலையில் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ரொஹிங்கியாக்கள் தாக்குதல்கள் இடம்பெற்ற ரகினே மாநிலத்தில் அதிக சனத்தொகையுடன் வாழ்கின்றனர்.

இந்நிலையில் ரகினே மாநிலத்தில் பெரும் எண்ணிக்கையிலான துருப்பினர் குவிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மியன்மாரில் மூன்றாவது நாளாக கலவரம்.. இதுவரை 24 பேர் கொல்லப்பட்டனர். மியன்மாரில் மூன்றாவது நாளாக கலவரம்.. இதுவரை 24 பேர் கொல்லப்பட்டனர். Reviewed by Madawala News on 10/12/2016 02:19:00 PM Rating: 5