Free Space

மத்திய தரைக்கடலில் பரிதவித்த லிபியாவை சேர்ந்த 2400 அகதிகள் மீட்பு.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

மத்திய தரைக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளில், 2,400 பேரை மீட்கப்பட்டுள்ளதாகவும் 14 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக இத்தாலி மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்கள் முன்பாக, லிபியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக மத்திய தரைக்கடல் வழியாக, மரப் படகுகளில், ஐரோப்பிய கண்டம் நோக்கி பயணம் மேற்கொண்டனர்.நடுவழியில், படகு உடைந்ததை அடுத்து, அவர்கள் நடுக்கடலில் விழுந்து, தத்தளித்தனர்.

இவர்களை அவ்வழியே வந்த இத்தாலி கடற்படையினர் பார்த்து, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதுவரை நடைபெற்ற மீட்புப் பணியில், 2,400 அகதிகளை உயிருடன் மீட்டுள்ளதாகவும், 14 பேரின் சடலம் கிடைத்துள்ளதாகவும் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகதிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகம் என்பதால், அனைவருக்கும் உயிர் காக்கும் கவசம் அளிக்கப்பட்டாலும், அவர்களை உடனடியாக மீட்டு கரைக்குக் கொண்டுவருவதில் சிக்கல் உள்ளதென்றும், கூடுதல் மீட்புப் படகுகளை வரவழைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், இத்தாலி கடற்படை சார்பாகக் கூறப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடலில் பரிதவித்த லிபியாவை சேர்ந்த 2400 அகதிகள் மீட்பு. மத்திய தரைக்கடலில் பரிதவித்த லிபியாவை சேர்ந்த 2400 அகதிகள் மீட்பு. Reviewed by Madawala News on 10/23/2016 07:31:00 PM Rating: 5