இம்மாதம் 25 முதல் 30 வரை மருத்துவ சிகிற்சைக்காக இந்தியா செல்ல நீதிமன்றம் அனுமதி ...


எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை சிகிச்சைகளுக்காக இந்தியா செல்லவுள்ளதால் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு நீதிமன்றில் ஆஜராக முடியாமல் உள்ளதாக மனு ஒன்றின் மூலம் அமைச்சர் பௌஸி தனது சட்டத்தரணி ஊடாக இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். 

இதன் அடிப்படையில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸிக்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியாவின் சென்னை நகருக்கு செல்ல கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதி வழங்கியுள்ளார்.

2014 / 2015 காலப்பகுதியில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக செயற்பட்ட போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்ட ஒரு கோடியே 95 இலட்சம் பெறுமதியான ஜீப் ரக வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை வௌியிடப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 23ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இன்று தீர்மானிக்கப்பட்டது.

இம்மாதம் 25 முதல் 30 வரை மருத்துவ சிகிற்சைக்காக இந்தியா செல்ல நீதிமன்றம் அனுமதி ... இம்மாதம் 25 முதல் 30 வரை மருத்துவ சிகிற்சைக்காக இந்தியா செல்ல நீதிமன்றம் அனுமதி ... Reviewed by Madawala News on 10/25/2016 03:42:00 PM Rating: 5