Free Space

யாழ். முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 26 வருடங்களை நினைவு கூர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் நிகழ்ச்சி .



யாழ்ப்பாணத்தில் இருந்து  பலவந்தமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட  26 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள
யாழ். முஸ்லீம் அமைப்பு (jaffna musleem association -JMA  )நிகழ்ச்சி ஒன்றை இம்மாதம் 30 ஆம் திகதி ஞாயிறன்று ஏற்பாடு செய்துள்ளது .

ஹரோவில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் கலாசார நிலையத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் யாழ்.  முஸ்லிம்கள் வெளியேற்றத்தை நினைவுபடுத்தி பல்வேறு சொற்பொழிவுகள் , சிறுவர் நிகழ்ச்சிகள் ,நாடகங்கள் மற்றும் இன்னோரன்ன நிகழ்வுகள் இடம்பெற உள்ளன .

வரலாற்றால் மறக்கவோ மறைக்கவோ முடியாத இந்த நாளை நினைவு படுத்தி  இடம் பெறுகிற இந்த நிகழ்வில்
ஐக்கிய இராச்சியத்தில் வாழும் யாழ் முஸ்லிம்கள் மட்டுமன்றி முழு ஐரோப்பாவிலும் வாழுகின்ற யாழ் முஸ்லிம்கள் அனைவரும்
குடும்பம் சகிதமாக வருகை தந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பினரால் வேண்டப்படுகிறார்கள் .
யாழ். முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 26 வருடங்களை நினைவு கூர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் நிகழ்ச்சி . யாழ். முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 26 வருடங்களை நினைவு கூர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் நிகழ்ச்சி . Reviewed by Madawala News on 10/29/2016 07:17:00 PM Rating: 5