ஐக்கிய இராச்சியத்தில் .. யாழ் முஸ்லிம்கள் வெளியேற்ற 26வருட நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகள்..

யாழ்ப்பாணத்தில் இருந்து  பலவந்தமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட  26 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள
யாழ். முஸ்லீம் அமைப்பு (Jaffna Muslim Association -JMA  )ஏற்பாடு செய்த
நிகழ்ச்சி   30 ஆம் திகதி ஞாயிறன்று
சிறப்பாக நடைபெற்றது.

ஹரோவில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் கலாசார நிலையத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்ற  இந்த நிகழ்வில் யாழ்.  முஸ்லிம்கள் வெளியேற்றத்தை நினைவுபடுத்தி பல்வேறு சொற்பொழிவுகள் , சிறுவர் நிகழ்ச்சிகள் ,நாடகங்கள் மற்றும் இன்னோரன்ன நிகழ்வுகள் இடம் பெற்றன .

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து மட்டுமல்லாது ஐரோப்பாவின் வெவ்வெறு பகுதிகளில்  இருந்தும்  வந்த நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் குடும்பம் சகிதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரலாற்றில் கறை படிந்த யாழ். முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவு கூர்ந்தனர்.

பிற்பகல் மூன்று மணிக்கு இரு சிறுமிகளான இன் கிராத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி  சகோதரர் ரியாஸின் வரவேற்புரையின் பின்னர் ஆரம்பமானது .

யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நினைவு படுத்தி  ஜே எம் ஏ அமைப்பின் கடந்த கால எதிர்கால சேவைகள் குறித்தும் அதன் நோக்கங்கள் குறித்தும் அமைப்பின் தலைவர் சகோதரர் எம் எம் கியாஸ் உரையாற்றினார் .


யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியற்றத்தால் படிக்கப்பட வேண்டிய பாடங்கள் என்கிற தலைப்பில் சகோதர் முஹம்மது ராஜி விசேட சொற்பொழிவாற்றினார் .

அதை அடுத்து லெஸ்டர் நகரை சேர்ந்த
அஷ் ஷேய்க் ஷபீக், யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பான விசேட மார்க்க சொற்பொழிவாற்றினர் .

இதையடுத்து ஈஸ்ட் ஹாம் ,ஸ்லோ லூட்டான் மற்றும் லெஸ்டர்
ஆகிய நகரங்களில் இருந்து வந்திருந்த யாழ்ப்பாண சிறுவர் சிறுமியர்கள்
இரு மணி நேரத்தையும் வெளியேற்றத்தையும் நினைவு படுத்தி
விசேட உரை, நாடகம் ,பாடல்கள் ஆகியவற்றை மிக அழகாக விதத்தில் திறமையாக தயாரித்தளித்து பார்ப்போரை மிகவும் ரசிக்க வைத்திருந்தனர் .

ஜே எம் ஏ அமைப்பின் செயற்பாடுகள் நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சகோதர் சமீஸ் விளக்கம் அளித்திருந்தார் .

பின்னர் நன்றியுரையுடன் இராப்போசன விருந்துடன் நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவடைந்தன.
ஐக்கிய இராச்சியத்தில் .. யாழ் முஸ்லிம்கள் வெளியேற்ற 26வருட நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகள்.. ஐக்கிய இராச்சியத்தில் .. யாழ் முஸ்லிம்கள் வெளியேற்ற 26வருட நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகள்.. Reviewed by Madawala News on 10/31/2016 07:36:00 AM Rating: 5