Accaddemy

விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட 2 மாணவர்களும் சுட்டுக்கொலையா?



கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது.

அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர்.

இந்தத் தகவலினால், மாணவர்களின் உடற்கூறு பரிசோதனை நடைபெறும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் பல்கலைக்கழக மாணவர்கள் சூழ்ந்துள்ளனர்.

விபத்தினால் மரணம் ஏற்பட்டதா அல்லது துப்பாக்கி பிரயோகத்தால் மரணம் ஏற்பட்டுள்ளதாக என உறுதி செய்ய சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வந்த பின்னரே உண்மை தெரியவரும் என எதிர்பாக்கப்படுகிறது!


இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற மாணவர்களை பொலிஸார் இடைவழியில் திடீரென மறித்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

விபத்தில் சிக்கியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் பெரிய சேதங்கள் எதுவுமின்றி காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்களே, இச்சம்பவத்தின் மூலம் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட 2 மாணவர்களும் சுட்டுக்கொலையா? விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட 2 மாணவர்களும் சுட்டுக்கொலையா? Reviewed by Madawala News on 10/21/2016 02:06:00 PM Rating: 5