மாவனல்லை சாஹிரா கல்லூரியிலிருந்து 31 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு. வாழ்த்துக்கள்.



அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மாவனல்லை சாஹிரா தேசிய   கல்லூரியிலிருந்து 31 மாணவர்கள் பல்கலைக்கழகம்  தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் ஜவாட் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானப் பிரிவில் 15 மாணவர்களும், வர்த்தகம் மற்றும் கலைப் பிரிவில் 14 மாணவர்களும்,  வர்த்தகம் மற்றும் கலைப் பிரிவில் (ஆங்கில மொழிமூலம்) 2 மாணவர்களும் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் தனது பராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டைக் கொண்டாட இருக்கும் மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரி கல்வித் துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்கள் விபரம் கீழுள்ள லிங்க் இல்  அறியலாம்..

http://mawanellazahira.com/31-zahirians-enter-the-university-this-year/


R.S.Mahi
மாவனல்லை சாஹிரா கல்லூரியிலிருந்து 31 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு. வாழ்த்துக்கள். மாவனல்லை சாஹிரா கல்லூரியிலிருந்து  31 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு. வாழ்த்துக்கள். Reviewed by Madawala News on 10/20/2016 11:10:00 AM Rating: 5