Accaddemy

பாடசாலை மாணவர்களுடன் பஸ்வண்டி விபத்து... 35 மாணவர்கள், 36 மாணவிகள் காயம்.



- ஜே.எம்.ஹபீஸ்-

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சுமார் 70 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆக்ராபத்தனை பிரதேசத்தில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.(10.10.2016) . அதிகாலையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

அதில் பயணித்த மாணவர்கள் 35 பேரும் மாணவிகள் 36 பேரும் காயமடைந்துள்ளனர்.

இது தவிர ஆசிரியர்கள் மூவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஆக்ரபத்தனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகி சிகிட்சை பெற்றுத் திரும்பிட்டதாகத் தெரிய வருகிறது.

பள்ளம் ஒன்றில் பஸ்வண்டி செல்லும் போது தொழில் நுட்பக் கோளாரு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பஸ்சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலீசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் இடம் பெறுகின்றன.

பாடசாலை மாணவர்களுடன் பஸ்வண்டி விபத்து... 35 மாணவர்கள், 36 மாணவிகள் காயம். பாடசாலை மாணவர்களுடன் பஸ்வண்டி விபத்து... 35  மாணவர்கள், 36 மாணவிகள் காயம். Reviewed by Madawala News on 10/10/2016 01:05:00 PM Rating: 5