Free Space

அக்குரண - அம்பத்தன்ன, பிங்கா ஓயாவுக்குள் மூவருடன் பாய்ந்த முச்சக்கர வண்டி.



-மொஹொமட் ஆஸிக்-

கண்டி- யாழ்ப்பாணம் ஏ -9 வீதியின் கட்டுகஸ்தோட்டைக்கு அண்மித்த ( அக்குரண - அம்பத்தன்ன) பிரதேசத்தில், முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி, பிங்கா ஓயாவுக்குள் பாய்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

எனினும், முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணொருவர் உட்பட மூவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

பாதையின் கீழிறங்கியுள்ளமையால் அப்பகுதியில் போடப்பட்டிருந்த தற்காலிக வேகத்தடுப்பில் மோதிப் பாய்ந்தே, அந்த முச்சக்கரவண்டி பிங்கா ஓயாவுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


அக்குரண - அம்பத்தன்ன, பிங்கா ஓயாவுக்குள் மூவருடன் பாய்ந்த முச்சக்கர வண்டி. அக்குரண - அம்பத்தன்ன, பிங்கா ஓயாவுக்குள் மூவருடன்  பாய்ந்த முச்சக்கர வண்டி. Reviewed by Madawala News on 10/24/2016 09:30:00 AM Rating: 5