Accaddemy

மஹிந்த ஆட்சியில் கிடைத்த 400 மேலதிக ஹஜ் கோட்டக்களை நல்லாட்சில் பெற்றுக்கொள்ளமுடியாமல் போனது பாரதூரமான விடயம் !



மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிகாலத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட மேலதிக 400 ஹஜ் கோட்டக்களை பெற்றுக்கொள்ள முஸ்லிம் கலாசார அமைச்சுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போனது ஒரு சதாரன விடயமல்ல எனவும் சவுதி -இலங்கை நல்லுறவை வளர்க்க முஸ்லீம் கலாசார அமைச்சு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.

இன்று காலை கொழும்பு கிரான்பாஸ் இனாமுல் ஹக் பள்ளிவாயலுக்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 325000 ரூபா பொருமதியான கட்டட மூலப்பொருற்கள் வழங்கும் நிகழ்வில் கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு கருத்து வெளியிட்ட அவர்..

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிகாலத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட மேலதிக 400 ஹஜ் கோட்டக்களை பெற்றுக்கொள்ள முஸ்லிம் கலாசார அமைச்சுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போனது ஒரு சதாரன விடயமல்ல எனவும் சவுதி -இலங்கை நல்லுறவை வளர்க்க முஸ்லீம் கலாசார அமைச்சு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

கடந்த காலத்தில் சவுதி அரேபியா இலங்கையுடன் நட்புடன் இருந்து வந்தது.ஆனால் மேலதிக ஹஜ் கோட்டா விடயம் இலங்கை சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே இருந்த நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதின் ஒரு வெளிப்பாடாகாவே நாம் காண்கிறோம்.

கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக  ஐ நா மன்றங்களில் யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது முஸ்லீம் நாடுகள் எமக்கு பாரிய ஆதரவை வழங்கியுள்ளது என்பதை நான் நினைவில் நிறுத்திக்கொண்டு எமது எதிராகால உறவுகளை வளர்த்துக்கொள்ள செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
மஹிந்த ஆட்சியில் கிடைத்த 400 மேலதிக ஹஜ் கோட்டக்களை நல்லாட்சில் பெற்றுக்கொள்ளமுடியாமல் போனது பாரதூரமான விடயம் ! மஹிந்த ஆட்சியில் கிடைத்த 400 மேலதிக ஹஜ் கோட்டக்களை நல்லாட்சில் பெற்றுக்கொள்ளமுடியாமல் போனது பாரதூரமான விடயம் ! Reviewed by Madawala News on 10/23/2016 11:58:00 AM Rating: 5