Accaddemy

மகிந்த காலத்தில் பெற்று கொள்ளப்பட்ட 42,300 கோடி ரூபா கடனுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பு.



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் 2005ஆம் ஆண்டில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 42,300 கோடி ரூபா கடன் பணத்திற்காக நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி ஆராய்வதற்கு உலக வங்கி மற்றும் பல வெளிநாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் அமெரிக்கா, ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் தூதுவர்கள் மற்றும் உலக வங்கி பணிப்பாளர்களுடன் அண்மையில் நிதி அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய கடன் பணத்தில் சில பகுதிகளை நீக்க முடியுமா? அந்த கடன் பணத்தை கட்டுவதற்காக அதிக காலம் வழங்க முடியுமா? அல்லது அதற்கு மேலதிகமாக சில நிவாரணங்களை வழங்க முடியுமா என ஆராயப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது எதிர்வரும் வரவு செலவுத்திட்ட யோசனை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த காலத்தில் பெற்று கொள்ளப்பட்ட 42,300 கோடி ரூபா கடனுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பு. மகிந்த காலத்தில்  பெற்று கொள்ளப்பட்ட 42,300 கோடி ரூபா கடனுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பு. Reviewed by Madawala News on 10/02/2016 10:42:00 AM Rating: 5