Free Space

இலங்கைக்கு ஜப்பான் 4662 கோடி கடன் வழங்க முன்வந்தது !


இலங்­கையின் அடுத்த ஐந்து வரு­டங்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுக்கும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு ஜப்பான் 46,622 மில்­லியன் ரூபாவை (4662 கோடி)கட­னு­த­வி­யாக வழங்­கி­யுள்­ள­தாக நிதி­ய­மைச்சு அறி­வித்­துள்­ளது. 

அது­மட்­டு­மன்றி அனு­ரா­த­புரம் வடக்கு நீர் வழங்கல் திட்­டத்­துக்­காக 32,169 மில்­லியன் ரூபா­வையும் கட­னாக வழங்­க­வ­தற்கு ஜப்பான் முன் வந்­துள்­ள­தா­கவும் நிதி­ய­மைச்சு அறி­வித்­துள்­ளது. 

இந்தக் கட­னு­த­விகள் தொடர்­பான உடன்­ப­டிக்கை நேற்று இலங்கை மற்றும் ஜப்பான் அர­சாங்­கங்­க­ளுக்கு இடையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. நிதி­ய­மைச்சில் இடம்­பெற்ற இந்த நிகழ்வில் இலங்­கைக்­கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுக­னுமா மற்றும் திறை­சே­ரியின் பிரதி செயலாளர் சி.ஏக்கநாயக்க ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். 

கடந்த வருடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவிகள் வழங்கப்படும் என ஜப்பான் பிரதமர் உறுதியளித்திருந்தார். அந்த வகையில் தற்போது ஜப்பான் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைக்கு ஜப்பான் 4662 கோடி கடன் வழங்க முன்வந்தது ! இலங்கைக்கு ஜப்பான் 4662 கோடி கடன் வழங்க முன்வந்தது ! Reviewed by Madawala News on 10/11/2016 07:27:00 AM Rating: 5