Free Space

மடவளை பஸார் நசீர் கான் ( வயது 47) இன்று காலை வீட்டிலிருந்து ஜனாஸாவாக மீட்பு. போலீசார் களத்தில்.



மடவளை பஸார் இலுக்வத்தயில்  ( மலைவீடு - பள்ளிக்காணிக்கு செல்லும் பிரதேசம் ) இன்று காலை இடம்பெற்ற ஜனாஸா தொடர்பில் சில விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிய வருகிறது.

 மடவளை இலுக்வத்தயில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தந்தையான நசீர் கான் ( வயது 47) என்பவர் நேற்று இரவு ( மனைவி மற்றும் பிள்ளைகள் அவரின் தாய் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில்) வீட்டில் தனிமையில் இருந்த நிலையிலேயே இன்று காலை ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.

பலகை Mall ஒன்றில் தொழிலாளியாக கடமை புரியும் இவர் நேற்றிரவு உணவை உட்கொண்ட நிலையில் வீட்டினுள் உயிரிழந்து விழுந்துள்ளார். அதேவேளை சில இடங்களில் நிலத்தில் இரத்தம் காணப்படுவதால் இன்று காலை அதனை கண்ணுற்றவர்கள் போலிசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தற்போது களத்தில் வத்தேகம போலீசார் ( போலிஸ் மோப்ப நாய் உற்பட) மற்றும் மரண விசாரணை அதிகாரிகள், தடவியல் நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிமையில் இருந்த போது ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் இதன்போது இரத்தம் வெளியேறி இருக்கலாம் எனவும்  சந்தேகிக்கபடுகிறது.


மடவளை பஸார் நசீர் கான் ( வயது 47) இன்று காலை வீட்டிலிருந்து ஜனாஸாவாக மீட்பு. போலீசார் களத்தில். மடவளை பஸார்  நசீர் கான் ( வயது 47) இன்று காலை வீட்டிலிருந்து ஜனாஸாவாக மீட்பு. போலீசார் களத்தில். Reviewed by Madawala News on 10/02/2016 02:05:00 PM Rating: 5