Accaddemy

பஸ் மிதிபலகை உடைந்து விழுந்து 4 மாணவர்கள் காயம், சாரதி கைது



வெல்லவாய, மல்வத்தாவல பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலருடன் பயணித்த தனியார் பஸ் வண்டியின் மிதிபலகை உடைந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த பஸ் வண்டி கிரிந்திஓயா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
பஸ் மிதிபலகை உடைந்து விழுந்து 4 மாணவர்கள் காயம், சாரதி கைது பஸ் மிதிபலகை உடைந்து விழுந்து 4 மாணவர்கள் காயம், சாரதி கைது  Reviewed by Madawala News on 10/31/2016 09:58:00 PM Rating: 5