Accaddemy

520 கோடி வருமானம் ஈட்டிய விதம் தொடர்பில் விசாரனை தேவை ...


முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மஹேந்திரனின் மருமகனின் கம்பனி குறுகிய காலத்திற்குள் ஈட்டிய லாபம் தொடர்பில் அந்த நிறுவனத்துக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்கும்படி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

மத்திய வங்கிக்கு கொள்வனவு செய்யப்பட்ட முறிகள் அதிக வட்டிக்கு முன்னாள் மத்திய வங்கி ஆளுனரின் மருமகனின் நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் கடும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனரின் மருமகனின் நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் 520 கோடி லாபம் ஈட்டிய ஆவணங்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களும் ஈட்டாத லாபத்தை 20 ஊழியர்களை மட்டுமே கொண்ட் இந்த நிறுவனம் ஈட்டியுள்ளமை தொடர்பில் தற்போது கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த நிலையிலே விமல் வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
520 கோடி வருமானம் ஈட்டிய விதம் தொடர்பில் விசாரனை தேவை ... 520 கோடி வருமானம் ஈட்டிய விதம் தொடர்பில் விசாரனை தேவை ... Reviewed by Madawala News on 10/06/2016 07:38:00 AM Rating: 5