தரம் 5 புலமைபரிசில் சித்தியடைந்தவர்களுக்கு இனி பிரபல பாடசாலை இல்லை ? அகிலவின் கருத்து கடும் கண்டனம் ..


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்குவதை நிறுத்தி விட்டு, புலமைப் பரிசில் நிதி மாத்திரம் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம்  குறிப்பிட்டுள்ளார்.

நுகவல தேசிய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிபிட்டார்.


இந்த நிலையில அவரது இந்த கருத்தக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

நிகழ்வுகளில் கலந்துகொண்டு புத்திஜீவிகளை கலந்துரையாடாமல் கருத்துக்களைப் பகிரங்கமாக தெரிவிப்பது நகைச்சுவையாகவுள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தை அமுல்படுத்துவதில் கல்வி அமைச்சு முயற்சியெடுக்காதுள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

தரம் 5 புலமைபரிசில் சித்தியடைந்தவர்களுக்கு இனி பிரபல பாடசாலை இல்லை ? அகிலவின் கருத்து கடும் கண்டனம் .. தரம் 5 புலமைபரிசில் சித்தியடைந்தவர்களுக்கு இனி பிரபல பாடசாலை இல்லை ? அகிலவின் கருத்து கடும் கண்டனம் .. Reviewed by Madawala News on 10/15/2016 09:13:00 AM Rating: 5