மின் கட்டணங்களை 5 % அதிகரிக்க கோருகிறது இலங்கை மின்சார சபை


மின்கட்டணங்களை விரைவில் அதிகரிக்க இலங்கை மின்சார சபை ஆயாத்தமாகி வருவதாக நாம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் வீட்டுப் பாவனை உட்பட சகல நுகர்வோர் பிரிவுகளுக்கும் 5 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குமாறு இலங்கை மின்சார சபை, இலங்கை பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் மாதாந்த செலவு  800 மில்லியனினால் அதிகரித்துள்ளதாகவும்,எதிர்வரும் 06 மாத காலத்திற்கு 06 பில்லியன் ரூபா வருமானம் ஒன்று அவசியம் எனவும் ஆணைக்குழுவிடம்  இலங்கை மின்சார சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

மின் கட்டணங்களை 5 % அதிகரிக்க கோருகிறது இலங்கை மின்சார சபை மின் கட்டணங்களை 5 % அதிகரிக்க கோருகிறது இலங்கை மின்சார சபை Reviewed by Madawala News on 10/03/2016 09:07:00 PM Rating: 5