Accaddemy

முன்னாள் மனைவிக்கு இலங்கை நாணயப்படி 6235. கோடி ஜீவனாம்சம் வழங்கும் கோடீஸ்வரர்




அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் ரிச்சார்ட் கேரிங்(68). லண்டனில் உள்ள பல ஆடம்பர ஓட்டல்களுக்கு இவர் தான் சொந்தக்காரர்.ஓட்டல்கள் மட்டுமின்றி அழகு சாதனங்களை தாயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வரும் ரிச்சார்ட்டின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு 700 மில்லியன் பவுண்ட் ஆகும்.

45 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாக்குயி(67) என்ற பெண்ணை ரிச்சார்ட் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்

அண்மைக்காலமாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் மனைவியை ரிச்சார்ட் விவாகரத்து செய்துள்ளார்.

விவாகரத்திற்கு முன்னதாகவே பிரேசில் நாட்டை சேர்ந்த 35 வயதானபட்ரிகா மொண்டினி என்று பெண்ணுடன் ரிச்சார்ட்டிற்கு உறவு இருந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தியும் உள்ளது

ரிச்சார்ட் தனது மனைவியான ஜாக்குயியை விவாகரத்து செய்ததை தொடர்ந்து, தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து தற்போது வசித்து வருகிறார்.

முதல் மனைவிக்கு விவாகரத்து வழங்கியுள்ளதால் அவருக்கு ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பான வழக்கில் தற்போது ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் மனைவிக்கு ரிச்சார்ட் 350 மில்லியன் பவுண்ட் (இலங்கை மதிப்பில் ரூ.6235 கோடி   ) ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், இங்கிலாந்து நாட்டிலேயே ஒருவர் அதிகளவில் ஜீவனாம்சம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மனைவிக்கு இலங்கை நாணயப்படி 6235. கோடி ஜீவனாம்சம் வழங்கும் கோடீஸ்வரர் முன்னாள் மனைவிக்கு இலங்கை நாணயப்படி 6235. கோடி ஜீவனாம்சம் வழங்கும் கோடீஸ்வரர் Reviewed by Madawala News on 10/06/2016 08:16:00 PM Rating: 5