730 ஐ ஏற்கமாட்டோம் 1000 ரூபா வேண்டும் ...


தோட்ட தொழிலாளர்களுக்கு முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது போல் 730 ரூபாய் வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் தொழிற்சங்கங்கள் முன்வைத்த ஆயிரம் ரூபா சம்பளமும் ஆறு நாள் வேலையும் எமக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தோட்ட தொழிலாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

தமக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு, 18 மாதங்களுக்கான சம்பள நிலுவையும், வாரத்தில் ஆறு நாள் தொழிலும் கிடைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டுமானால் தாம் போராட்டத்தை கைவிடுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

1000 ரூபாய் சம்பள உயர்வு கோரிய பெருந் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

எவ்வாறாயினும், அவர்களின் சம்பளத்தை 110 ரூபாவால் அதிகரித்து 730 ரூபாய் நாள் சம்பளம் வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியுள்ளதாக, அமைச்சர் டப்ளியூ.டி.ஜே.செனவிரத்ன நேற்று தெரிவித்தார். AD
730 ஐ ஏற்கமாட்டோம் 1000 ரூபா வேண்டும் ... 730 ஐ ஏற்கமாட்டோம் 1000 ரூபா வேண்டும் ... Reviewed by Madawala News on 10/06/2016 01:56:00 PM Rating: 5