Kidny

Kidny

ஸ்ரீலங்கனில் தொழில்நுட்பக் கோளாறு.. 8 மணி நேர போராட்டத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள்.



- தொகுப்பு : திருச்சி ஷாகுல் ஹமீத் -

இலங்கையிலிருந்து திங்கள்கிழமை காலை திருச்சி வந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 8 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

கொழும்பு மற்றும் திருச்சி இடையே தினசரி 2 முறை இயக்கப்பட்டு வருகிறது ஸ்ரீலங்கன் விமானம்.

இந்த விமானம்தி ங்கள்கிழமை காலை வழக்கமான நேரத்தில் சுமார் 8.50-க்கு திருச்சி வந்தடைந்தது. பயணிகளை இறக்கி, ஏற்றிக் கொண்டு காலை 9.50-க்கு புறப்படத் தயாரானபோது விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பயணிகள் 110 பேரும் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேரம் போராடி பழுது நீக்கப்பட்டு, பிற்பகல் 5.45-க்கு (சுமார் 8 மணி நேரம் தாமதமாக) விமானம் கொழும்பு புறப்பட்டுச் சென்றது.
ஸ்ரீலங்கனில் தொழில்நுட்பக் கோளாறு.. 8 மணி நேர போராட்டத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள். ஸ்ரீலங்கனில் தொழில்நுட்பக் கோளாறு..  8 மணி நேர போராட்டத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள். Reviewed by Madawala News on 10/25/2016 11:11:00 AM Rating: 5