Free Space

போபால் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 8 முஸ்லிம் மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

இந்திய பொலிஸாரால் பல்வேறு நாசகார வேளைகளில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு போபாலில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 8 முஸ்லிம் மாணவர்கள் காவலில் இருந்த போலீஸ் அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாகவும் அவர்களை கைது செய்ய தேடுதல் நடத்திய போது மறைந்து இருந்து போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறி இன்று அதிகாலை சுட்டு கொல்லப்பட்டனர் .
அவர்கள் சிறையில் இருந்து தப்பி ஓடியது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்திஉள்ளது. இதற்கிடையே என்ஐஏ (தேசிய புலனாய்வு பிரிவு) விசாரிக்கிறது என்று மாநில அரசு தெரிவித்து உள்ளது.


என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட 8 முஸ்லிம் மாணவர்களும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மராட்டியம், மத்திய பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 8 மாநிலங்களில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டதாக கூறி கைதானவர்கள்.
சுட்டுக்கொல்லப்பட்ட என்கவுண்டர் தொடர்பாக கேள்விகளை எழுப்பி உள்ள அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணையின் கீழ் இருக்கும் சிறைவாசிகள் சரியான ஆடைகள், காலணிகள் மற்றும் கை கடிகாரங்கள் அணிந்து இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. விசாரணையின் கீழ் இருப்பவர்களுக்கு இது வழங்கப்படாது. இவ்விவகாரத்தில் உளதுறை அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூற்றுக்கு இடையே பெரும் வேறுபாடுகள் உள்ளது. சாதாரண மனிதருக்கும் தெரியும் இது நம்மமுடியாதது என்று. குற்றவாளிகள் உச்சக்கட்ட பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து தப்பியது எப்படி என்பது தொடர்பாக சரியான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மிகவும் பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து குற்றவாளிகள் தப்பிஉள்ளனர் என்பது ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது என்று கூறிஉள்ளார்.

என்கவுண்டர் தொடர்பாக கேள்விகளை எழுப்பிஉள்ள ஒவைசி சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் அப்போதுதான் அனைத்து உண்மைகளும் தெரியவரும் மற்றும் இதில் உண்மையை அடக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் வெளிவரும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
போபால் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 8 முஸ்லிம் மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர் போபால் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 8 முஸ்லிம் மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர் Reviewed by Madawala News on 10/31/2016 09:25:00 PM Rating: 5