பெட் ஸ்கேனர் கொள்வனவு செய்ய புரொகியுமண்ட் புரோஸீஜர்களுக்கு குறைந்தது 9 மாதங்கள் செல்லும் : அமைச்சர் ரஜித


மஹரக புற்று நோய் வைத்தியசாலைக்கு தேவையான பெட் ஸ்கேனர் ஒன்றை கொள்வனவு செய்ய கதீஜா பவுண்டேஷன் முன்னின்று சுமார் 20 கோடி ரூபாய் நிதி திரட்டியது.

இந்த நிதி திரட்டப்பட்டு வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் மஹரகம  வைத்தியசாலைக்கு இதுவரை பெட் ஸ்கேனர் கொள்வனவு செய்யப்படவில்லை 

இது தொடர்பில் இன்று பாராளுமன்ற அமர்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு பதில் அளித்த சுகாதார அமைச்சர்..

பெட் ஸ்கேனர் ஒன்றை கொள்வனவு செய்து எமக்கு தந்திருந்தால் நாம் பொருப்போற்றிருக்கலாம் ஆனால் நிதி கையளிக்கப்பட்டமையால் நாம் டெண்டர் வழிமுறையை பின்பற்றி விலை மனு கோரி நாம் அதனை கொள்வனவு செய்ய வேண்டும்.அதற்காக புரொகியுமண்ட் வேலைகளுக்காக 9 மாதங்கள் ஆகக்குறைந்தது செல்லும் என குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் இந்த கால தாமதம் தொடர்பில் கவனம் செலுத்தி அதனை குறைக்க நிதி அமைச்சருடன் அலோசனை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
பெட் ஸ்கேனர் கொள்வனவு செய்ய புரொகியுமண்ட் புரோஸீஜர்களுக்கு குறைந்தது 9 மாதங்கள் செல்லும் : அமைச்சர் ரஜித பெட் ஸ்கேனர் கொள்வனவு செய்ய புரொகியுமண்ட் புரோஸீஜர்களுக்கு குறைந்தது 9 மாதங்கள் செல்லும் : அமைச்சர் ரஜித Reviewed by Madawala News on 10/06/2016 01:05:00 PM Rating: 5