Accaddemy

90 நாட்களையும் தாண்டிய ஓர் மனிதப்பேரவலம்.



Muja Ashraff

காஷ்மீரின் சுதந்திர வேற்கையினை தடுப்பதற்காகவும், போராட்ட உணர்வுகளை மழுங்கடிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்தேர்ச்சியான அட்டூழியங்களினதும், மனித உரிமை மீறல்களினதும் மறுபக்கமே பெல்லட் காட்ரிஜ்கள்.

பெல்லட் காட்ரிஜ்கள் என்பது வெறும் கலகங்களை அடக்குவதற்காக பயண்படுத்தப்படும் ஆயுதங்களல்ல அவை மனித இனத்தை அழிப்பதற்கும், நிரந்தர நோயாளியாக மாற்றி உளவியல் ரீதியான பிரழ்வுகள் மூலம் போராட்ட களத்தை விட்டு அகற்றுவதற்கும் பாவிக்கப்படும் றசாயன பதார்த்தங்களை உள்ளடக்கிய மனிதகுல எதிரியாகும்

ஒரு காட்ரிஜ் வெடிக்கும்பொழுது 100 குண்டுகள் சிதறி வெடிக்கின்றது ஒரு 1பெல்லட் குண்டிலிருந்து 100 சிறிய இரண்டு மில்லிமீட்டரிலிருந்து, நான்கு மில்லிமீட்டர் அளவுடைய ஈய குண்டுகள் மிகவேகமாக பாயும்பொழுது கண்களை பாதித்து கண்ணின் மணியை சிதறடித்து பார்வை நரம்புகளையும் உருக்குலைத்து, பார்வையை முற்றாக பாதித்துவிடுகின்றது

இவற்றின் பாதிப்புகள் கண்பார்வையினை மட்டும் பறிப்பதோடு மட்டுப்படுத்தப்படுவதில்லை, மேனியங்கும் ஆழமான முறையில் ஊடுருவித்தாக்குவதால் ஈரல், சுவாசக்குழாய், இதயங்களன மிகமுக்கியமான பகுதிகளை செயழிலக்கசெய்து உயிரை பறித்துவிடும் தண்மை கொண்டது

இன்று காஷ்மீர் மக்கள் மீது திட்டமிட்ட அடிப்படையில் பிரயோகிக்கப்படுவதானது  சுதந்திரத்தின் மீது அந்த மக்கள் கொண்ட வேட்கையினை தணிக்க முடியாமல்  திணறிக்கொண்டிருக்கும் காவிய தேசம் தோல்வியின் பிடியில் சிக்கித்தவிப்பதையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

90 நாட்களையும் தாண்டிய ஓர் மனிதப்பேரவலம். 90 நாட்களையும் தாண்டிய ஓர் மனிதப்பேரவலம். Reviewed by Madawala News on 10/13/2016 07:06:00 PM Rating: 5