Accaddemy

97 மனைவிகளுடன் வாழும் மதகுரு மீண்டும் திருமணம்.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

நைஜீரியாவில் 97 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் மதகுரு மீண்டும் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நைஜீரியாவில் பிடா மாகாணத்தை சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. மத குருவாக இருக்கிறார். இவருக்கு இதுவரை 107 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது.

அவர்களில் 10 பேரை விவாகரத்து செய்துவிட்டார். மீதமுள்ள 97 பெண்களுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கு 185 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது.

ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். திடீரென வீடியோவில் தோன்றிய அவர் தான் மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்த இருப்பதாக அறிவித்தார்.

http://www.news.com.au/lifestyle/real-life/wtf/this-elderly-nigerian-man-has-married-more-than-100-women-in-his-lifetime/news-story/4e0db385c21f4907ed7f35ecaa8a688f
97 மனைவிகளுடன் வாழும் மதகுரு மீண்டும் திருமணம். 97 மனைவிகளுடன் வாழும் மதகுரு  மீண்டும் திருமணம். Reviewed by Madawala News on 10/19/2016 07:41:00 PM Rating: 5