கிளிநொச்சியில் பதட்டம் ! A 9 வீதி போக்குவரத்துக்கு தடை ...


கிளிநொச்சியில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் பதற்ற நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையில் கிளிநொச்சியிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது, அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் போத்தல்களை நடுவீதியில்  உடைத்தும் வீதியின் நடுவில் அமர்ந்தும்  தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனால் எற்பட்ட பதற்ற நிலைமையை அடக்க கலகம் அடக்கும் பொலிஸார் வருவிக்கப்பட்டுள்ளனர்.

வீதியில் டயர்களை எரித்தும் வீதியை மறைத்தும் தமது எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தும் நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கிளிநொச்சியில் பதட்டம் ! A 9 வீதி போக்குவரத்துக்கு தடை ... கிளிநொச்சியில் பதட்டம் ! A 9 வீதி போக்குவரத்துக்கு தடை ... Reviewed by Madawala News on 10/25/2016 07:33:00 PM Rating: 5