Accaddemy

(வீடியோ) மட்டக்களப்பு மாவட்டத்தில் தலை விரித்தாடும் பிரதேசவாதத்தினை விளையாட்டு துறையின் மூலமே இல்லாதொழிக்க முடியும்.



-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் தலை விரித்தாடும் பிரதேசவாதத்தினை விளையாட்டு துறையின் மூலமே இல்லாதொழிக்க முடியும்.

அந்த வகையிலே ஏறாவூர், கல்குடா, காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் உள்ள விளையாட்டு வீரர்களையும், அவர்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற கழகங்களையும் ஒன்றினைத்து ஒரு கட்டுக்கோப்பான ஒற்றுமைமிக்க புதியதோர் சமூதாயத்தினை கட்டியெழுப்புவதனூடாக மாவட்டத்தில் முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக காலத்துக்கு காலம் அரசியல்வாதிகளினால் உருவாக்கப்பட்டுள்ள .

பிரதேசவாதத்தினை இல்லாதொழிக்க முடியும். அதற்கு தன்னாலான அனைத்து பொருளாதார ரீதியான உதவிகளையும் மாவட்டத்தில் செயற்பட்டுவருக்கின்ற விளையாட்டு கழகங்கள் அனைத்திற்கும் வழங்க தயாராக இருக்கின்றேன்.

இவ்வாறு ஓட்டமாவடி  பிரதேசத்தில் காலத்தால் அழிக்க முடியாத ஆளுமைமிக்க ஆசானாக திகழ்ந்தவரும், விடுதலை புலிகளின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி ஷஹீதாக்கப்பட்ட சரீஃப் அலி ஆசிரியரின் பெயரில் இயங்கும் விளையாட்டு கழகமான சாட்டோ விளையாட்டு கழகம் தனது 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய சரீஃப் அலி ஆசிரியர் சவால் கிண்ண கிரிக்கட் இருபதுக்கு இருபது  கடின பந்து சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியானது இன்று 15.10.2016 சனிக்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு அரங்கில் இடம் பெற்ற பொழுது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான அப்துர் ரஃஹ்மான் உரையாற்றுகையில் மேற் கண்டவாறு தெரிவித்தார்.


மேலும் தனது கருத்தினை தெரிவித்த பொறியியலாளர் அப்துர் ரஃஹ்மான்.. கிழக்கு மாகாணத்திலே அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற கல்குடா, காத்தான்குடி ஏறாவூர் போன்ற பிரதேசங்களில் விளையாட்டு கழகங்களிலும் பாடசாலைகளிலும் இருக்கின்ற விளையாடு வீரர்கள் தேசிய சர்வதேச மட்டத்தில் பங்குபற்றுவதற்கான திறமைகளை கொண்டிருந்தும் அவர்களுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை.

மாவட்ட மட்டத்திற்குள்ளே அவர்களுடைய திறமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. இதனை நாங்கள் முதற்கட்டமாக தேசிய மட்டத்தில் அவர்களுடைய திறமைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல்வாதிகள், சமூக சிந்தனையாளர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து செயற்பட முன்வர வேண்டும். அதற்காக நல்லாட்சிகான தேசிய முன்னணியும் தனிப்பட்ட ரீதியில் தானும் முடியுமான பங்களிப்புக்களை வழங்க முன்வரும் அதே நேரத்தில், பிரதேசங்களில் இருக்கின்ற கழகங்களை ஒற்றுமைபடுத்தி சமூக ஒழுங்கமைப்புடன் விளையாட்டு துறையினை அபிவிருத்தி செய்வதற்கு தன்னாலான தனிப்பட்ட உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அத்தோடு சாட்டோ விளையாட்டு கழகமானது மூலம் பிரதேசங்களில் தலைவிரித்தாடுகின்ற பிரதேசவாதத்தினை விளையட்டு துறையின் மூலம் இல்லாதொழிக்க  முன்னின்று உழைக்குமாறும் வேண்டிக்கொண்டார்.
குறித்த இறுதி போட்டியில் வாழைச்சேனை நியூஸ்ட்டார் விளையாட்டு கழகமும், ஓட்டமாவடி ரேஞ்ஜர்ஸ் விளையாட்டு கழகமும் பங்கு பற்றியதில் சரீஃப் அலி சவால் கிண்ணத்தினை வாழைச்சேனை நியூஸ்ட்டார் விளையாட்டு கழகம் கைப்பற்றியது.

 மேலும் இந் நிகழ்விற்க்கு கல்குடா தொகுதியின்  நாலாபுறங்களிலிருந்தும் விளையாட்டு ரசிகர்கள், படித்தவர்கள், மாணவர்கள், என பெரும் திரலானோர் என்றும் இல்லாதவாறு சமூகமளித்திருந்தனை அவதானிக்க கூடியதாக இருந்தது.









(வீடியோ) மட்டக்களப்பு மாவட்டத்தில் தலை விரித்தாடும் பிரதேசவாதத்தினை விளையாட்டு துறையின் மூலமே இல்லாதொழிக்க முடியும்.  (வீடியோ) மட்டக்களப்பு மாவட்டத்தில் தலை விரித்தாடும் பிரதேசவாதத்தினை விளையாட்டு துறையின் மூலமே இல்லாதொழிக்க முடியும். Reviewed by Madawala News on 10/15/2016 10:58:00 PM Rating: 5