Accaddemy

மடவள வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலி.



கட்டுகஸ்தொட்ட - புத்தளம் வீதியில் ( கலகெதர போலிஸ் பிரிவில் உள்ள) மடவள வளைவு எனப்படும் இடத்துக்கு அருகில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக கலகெதர பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

வெலிவேரிய மற்றும் புளத்சிங்கள பிரதேசங்களைச் சேர்ந்த 57 மற்றும் 28 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலகெதர பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மடவள வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலி. மடவள வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலி. Reviewed by Madawala News on 10/08/2016 09:42:00 AM Rating: 5