முச்சக்கர வண்டி இரண்டும் காரொன்றும் மோதியதில் சாரதி பலி.



-எப்.முபாரக் -

திருகோணமலை-உப்புவௌி பொலிஸ் நிலைய  வாகன திருத்துமிடத்திற்கு முன்னால் முச்சக்கரவண்டி இரண்டும் காரொன்றும் மோதியதில் முற்சக்கர வண்டியின் சாரதியொருவர் இன்று புதன்கிழமை  (05)  உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-பாம் வீதியைச்சேர்ந்த எஸ்.ஜெயஹரன் (28 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி இரண்டும் காரொன்றும் மோதியதில் சாரதி பலி. முச்சக்கர வண்டி இரண்டும் காரொன்றும் மோதியதில் சாரதி பலி. Reviewed by Madawala News on 10/05/2016 04:09:00 PM Rating: 5