tg

ஏறாவூரில் போதை விழ்ப்புணர்வு பொதுக்கூட்டம்.



(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.(2:219)
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

மது அருந்திய ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவர்கள்

'இவரை அடியுங்கள்' என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப்பட்ட) தம் துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பியபோது மக்களில் சிலர், அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக!' என்று கூறி (சாபமிட்ட)னர். நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்கு ஒத்தாசை செய்யாதீர்கள்' என்றார்கள்.
(புகாரி 6777).

மதுபானம் போதைவஸ்த்து பாவனையால் மனித சமூகம் உலகிலும் மறுமையிலும் அடையும் நஷ்டத்தையும் இழிவையும் பற்றி விளக்கும் பொதுக்கூட்டம் ஒன்று, இன்ஸா அல்லாஹ் 14-10-2016 வெள்ளிக்கிழமை ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில்(ஆற்றங்கரைக்கு அருகில்) நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் நீங்களும் கலந்து கொண்டு அங்கு பேசப்படும் விடயங்களை கேட்டு பின்னர் நீங்கள் பலருக்கு இதனை பிரச்சாரம் செய்யுங்கள்.
நன்மையில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம்.பாவத்தை தடுக்க அனைவரும் முன்வருவோம்.

ஏற்பாடு:- ஏறாவூர் தவ்ஹீத் ஜமாத்.


(Riyas mim மீராகேணி)

ஏறாவூரில் போதை விழ்ப்புணர்வு பொதுக்கூட்டம். ஏறாவூரில் போதை விழ்ப்புணர்வு பொதுக்கூட்டம். Reviewed by Madawala News on 10/14/2016 08:44:00 AM Rating: 5