Accaddemy

(படங்கள்) அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் மனைவி சற்றுமுன்னர் கெலிஓய விபத்தில் உயிரிழந்தார்.



இலங்கை இஸ்லாமிய கல்வியியலாளர்களில் குறிப்பிடத்தக்கவரும் நாட்டில் இஸ்லாமிய அழைப்புப் பணியில் காத்திரமான பங்களிப்பினைச் செய்து வருபவரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் உப தலைவரும், ஜாமியா நளீமியாவின் பிரதி  தலைவருமான  அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் மனைவி சற்று முன்னர் கம்பளை - கெலிஓயவுக்கு இடையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளர்.

நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


பகலுணவுக்காக வாகனத்தை வீதியோரம் நிறுத்திவிட்டு அஷ்ஷெய்க் .சி. அகார் முகம்மத்  அவர்களும் அவர்களோடு பயணித்தவர்களும் உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ளனர். எனினும் அவரது பாரியார் மாத்திரம் காருக்குள் இருந்துள்ளார்.


இந் நிலையில் பின்புறமாக வந்த  லொறி ஒன்று காருடன் மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன



(படங்கள்) அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் மனைவி சற்றுமுன்னர் கெலிஓய விபத்தில் உயிரிழந்தார். (படங்கள்)  அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் மனைவி சற்றுமுன்னர்  கெலிஓய விபத்தில் உயிரிழந்தார். Reviewed by Madawala News on 10/30/2016 04:53:00 PM Rating: 5