Free Space

பத்து வயதில் நானூறு மொழிகளை பேசும் மாணவன் அக்ரம்.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

இந்தியாவின் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 10 வயது அக்ரம் என்ற மாணவர் கலந்து கொண்டு 400 மொழிகளில் சரமாரியாகப் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார். இவர் இஸ்ரேலில் படித்து வருகிறாராம். வாழ்க்கைக்கு ஐந்து மொழிகளும், வாழ்வதற்கு ஆறு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும் என்பது மாணவர் அக்ரம் கொடுத்த கூடுதல் தகவல்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ? என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
நானுறு மொழிகள் அறிந்த பத்து வயது மாணவர் அக்ரம் மாணவர்களிடம் சிறப்புரை நிகழ்த்தினார். அக்ரம் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தைச் சேர்ந்தவர். சென்னையில் வசிக்கிறார். ஆன்லைன் மூலமாக இஸ்ரேலில் உள்ள கல்வி முறையில் படிக்கிறார். அரசு உதவி பெறும் பள்ளியில் அவர் பயிற்சி தந்தது இதுவே முதல் முறையாகும். அவர் பேசும்போது இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகளான அரபிக், அச்செனிஸ், ஆப்ரிக்கன்ஸ், அல் பேனியன், அமசைக் போன்ற நானுறு மொழிகளை மூன்று நிமிடத்தில் கூறி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.

நீங்கள் எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன் என்பதை நாற்பது மொழிகளில் பேசி காட்டினார். மேலும் தேவகோட்டை என்கிற வார்த்தையை நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் எழுதி காண்பித்து மாணவர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார். குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி? என்பது தொடர்பாக மூளைக்கு பயிற்சி அளிக்கும் இருபத்தைந்து பயிற்சி முறைகளை செய்து காண்பித்தார்.

இயற்கை உணவு முறைகளை உண்பதால் தனக்கு எந்த வியாதியும் இது வரை வந்தது கிடையாது என்றும் ,இது வரை தான் மருத்துவமனைக்கு சென்றது கிடையாது என்றும் தெரிவித்தார். தற்போது தான் இஸ்ரேல் நாட்டில் படிப்பதாகவும் தெரிவித்தார். மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே எனது குறிக்கோள் என்றும் தெரிவித்தார். இதனை பார்த்து அனைத்து மாணவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள்.

பத்து வயதில் நானூறு மொழிகளை பேசும் மாணவன் அக்ரம். பத்து வயதில் நானூறு மொழிகளை பேசும் மாணவன் அக்ரம். Reviewed by Madawala News on 10/20/2016 07:45:00 PM Rating: 5