ஒரே ஒரு நள்ளிரவில் உலகைக் கலக்கிய பாகிஸ்தான் டீக்கடை பையன்.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

பாகிஸ்தான் டீக்கடை பையன் ஒருவர் திடீரென இன்டர்நெட் சென்சேஷனல் ஆகியிருக்கிறார்.

ஆனால், அவர் ஏன், எப்படி, எதற்கு பிரபலம் ஆனார் என்றெல்லாம் தெரிந்தால் சிறியளவில் ஷாக் ஏற்படலாம். சிலருக்கு கோபம் கூட வரலாம். புகழ் ஒருவரை எப்படி தேடி வரும் என சொல்ல முடியாது.

பார்க்க அழகாக சமத்து பையன் மாதிரி தான் இருக்கிறார் அந்த பாகிஸ்தான் டீக்கடைக் காரர். ஆனால் அவரது விஷேசமே அவரது கண்கள் தான்...

அர்ஷத் கான் பாக்கிஸ்தானில் டீக்கடையில் வேலை செய்கிறார். அதுவும் கடந்த ஒருசில மாதங்களாக தான். இதற்கு முன்பு அவர் பழம் விற்று வந்ததாக கூறப்படுகிறது.

அர்ஷத் கானின் வயது வெறும் 18 தான்.ஆனால், இவருக்கே தெரியாமல் சமூக தலத்தில் பகிரப்பட்ட இவரது புகைப்படம் காரணமாக இவர் இன்று உலக பிரபலம்.

அர்ஷத் கானின் தனித்துவமே அவரது நீலநிறக் கண்கள் தான். நீலநிறக் கண்களும், அர்ஷத் கானின் இளம் வயது அழகும், உலக பெண்களை வசீகரித்து விட்டது. அதனாலே இவரது படங்களை இன்ஸ்டா உலகில் அதிக ஷேர் செய்கிறார்கள்.

இப்படியே போனால் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கூட குவியலாம். ஆனால், எளிமையான அர்ஷத் கான் அதில் எல்லாம் விருப்பமில்லை, தானுண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார்.

திடீரென இவரை பேட்டிக் காண டிவியில் இருந்து நிருபர்கள் எல்லாம் வருகிறார்கள், கேமராக்கள் கண்முன் மொய்க்கின்றன. ஆனால், இவரது படம் எப்படி இணையத்தில் கசிந்தது என இவருக்கே தெரியாது.
ஒரே ஒரு நள்ளிரவில் உலகைக் கலக்கிய பாகிஸ்தான் டீக்கடை பையன். ஒரே ஒரு நள்ளிரவில் உலகைக் கலக்கிய பாகிஸ்தான் டீக்கடை பையன். Reviewed by Madawala News on 10/20/2016 08:42:00 PM Rating: 5