Free Space

கல்முனை - அக்கரைப்பற்று வழித்தடத்தில் மாலை நேரங்களில் பஸ் வசதியில்லாமல் மக்கள் அவதி.



கிழக்கின் முக்கிய நகரமான கல்முனை நகரிலிருந்து அக்கரைப்பற்றுக்கு பி.ப 6:30 க்குப்பின் செல்வதற்கான பொதுப்போக்குவரத்து பஸ் வசதி இல்லாமல் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து முகம் கொடுத்து வருகின்றனர்.

கல்முனை முதல் அக்கரைப்பற்று வரையுமான ஊர்களுக்கு பயணிக்கும், கல்முனை வடக்கு மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைகளில் நோயாளர்களை பார்வையிட்டு திரும்பும் மக்கள், அதே போன்று பருத்தித்துறை, வவுனியா ஆகிய இடங்களில் இருந்து கல்முனைக்கு பஸ்களில் வரும் கல்முனையை தாண்டிய ஊர்களில் வதியும் மக்கள். மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேச அரச தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர்,

அக்கரைப்பற்றிலிருந்து இரவு 7:30க்கு பொத்துவில் ஊடாக கொழும்பு செல்லும் பஸ்ஸை உபயோகிக்க வேண்டியிருப்போர், கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது பிரதேசங்களுக்கு கொள்வனவுக்காக வரும் வெளிப்பிரதேச மக்கள். என பலர் கஷ்டங்களை எதிர்நோக்கி கொண்டிருப்பதை காண முடிகின்றது. பஸ் வண்டியற்ற ஒரு துர்ப்பாக்கிய நிலமையினால் மக்கள் பாதையோரங்களில் காத்துக்கொண்டிருப்பது இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ அரசியல்வாதிகளுக்கோ தெரியவில்லை போலும்.

மேலும் இந்த நேரத்தில் வரும் கட்டுநாயக்க - அக்கரைப்பற்று பஸ்கூட பெரும்பாலும் கல்முனையுடன் தன் பயணத்தை நிறுத்திக்கொள்கிறது. இந்த பஸ் கல்முனை டிப்போவுக்கு சொந்தமானது.

இரவு 6:30 முதல் 7 மணிக்குள் கல்முனைக்கு வரும் திருகோணமலை நெடுந்தூர பஸ்கூட சனநெரிசலானதாக இருக்கிறது. மேலும் இந்நெடுந்தூர பஸ் குறிப்பிட்ட சில பஸ் தரிப்பிடங்களிலேயே நிறுத்தப்படுவதால் இடையில் இறங்கவேண்டிய மக்கள், குறிப்பாக வயோதிபர்கள் தாய்மார்கள் பெரும் கஷ்ட்டத்திற்கு ஆளாகிறார்கள்.

அத்துடன் இந்நேரத்தில் இருக்கும் ஒரே ஒரு தனியார் பஸ்ஸான ACN கூட குறித்த திருகோணமலை - திருக்கோவில் பஸ் வரும் வரை கல்முனையில் இருந்து கிளம்புவதில்லை.  இந்த பஸ்ஸில் சாரதி, நடத்துனரின் முறையற்ற நடவடிக்கைகள் காரணமாக இப்பஸ்ஸை மக்கள் வெறுக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரதேச அரசியல்வாதிகள் பிப 6:30 மற்றும் பிப 07:00 ஆகிய நேரங்களுக்கு இரண்டு இபோச பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் வினயமாக வேண்டுகிறார்கள். மக்களின் இவ்வேண்டுகோளை கருத்திற் கொண்டு உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா ?


Report By:  எம் எச் எம் ஹிஸாம் 
கல்முனை - அக்கரைப்பற்று வழித்தடத்தில் மாலை நேரங்களில் பஸ் வசதியில்லாமல் மக்கள் அவதி. கல்முனை - அக்கரைப்பற்று வழித்தடத்தில் மாலை நேரங்களில் பஸ் வசதியில்லாமல் மக்கள் அவதி. Reviewed by Madawala News on 10/03/2016 10:20:00 PM Rating: 5