புதிய பஸ் வண்டி ஒன்று வந்ததால், கண்டி பிரதேச தனியார் பஸ் ஊழியர்கள் ஸ்ட்ரைக்..



(ஜே.எம்.ஹபீஸ்-

கண்டி - அங்கும்புறை (பாதை இலக்கம்- 610) பாதையில் பயணிக்கும் தனியார் பஸ் ஊழியர்கள் (இன்று 25 காலை முதல) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி அங்கும்புறை வீதியில் சேவையிலி; ஈடுபடுத்தும் வகையில் புதிய பஸ் வண்டி ஒன்றிற்கு  பயண அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளதாகவும் அதனை இரத்துச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்து இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஷ்கரிப்பில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கண்டியிலிருந்து (இன்று 25 காலை முதல்) அங்கும்புறை வரை பயனிக்கும் ஒன்பது பஸ் வண்டிகளையும் பூஜாபிட்டிய நகரில் நிறுத்தி விட்டு இவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடு பட்டுள்ளனர்.

மத்திய மாகாண போக்குவருத்து அமைச்சர் அவரது நண்பர் ஒருவருக்கே  அனுமதிப்பத்திரம் வழங்கியதாகவும் அதனால் தமக்கு போதியளவு வருமானம் ஏற்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமது பிரச்சினைக்கு சாதகமான முடிவு கிடைக்காவிட்டால் பணி பகிஷ்கரிப்பு நீடிக்கப்படும் என்றும் இது தொடாபாக தாம் பாரிய  ஆர்ப்பாட்டம் ஒன்றுவரை செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மத்திய மாகாண போக்குவருத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தனவிடம் வினவிய போது , புதிதாக எவ்வித அனுமதிப்பத்திரமும் வழங்க வில்லை என்றும் ஏற்கனவே இருந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துள்ளதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.


புதிய பஸ் வண்டி ஒன்று வந்ததால், கண்டி பிரதேச தனியார் பஸ் ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. புதிய பஸ் வண்டி ஒன்று வந்ததால்,  கண்டி பிரதேச தனியார் பஸ் ஊழியர்கள்  ஸ்ட்ரைக்.. Reviewed by Madawala News on 10/25/2016 04:04:00 PM Rating: 5