Free Space

தீர்வு கிடைக்கும் வரை வெளியேற மாட்டேன். முதலமைச்சர் நஸிர் அறிவிப்பு.



பைஷல் இஸ்மாயில் –

கல்வியியல் கல்லூரிகளில் கற்கையை பூர்த்திசெய்து வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் நியமனத்துக்கு சரியான  தீர்வு வழங்கப்படாவிட்டால் நான் கல்வி அமைச்சை விட்டு வெளியேற மாட்டேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று (17) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்ற இந்நிலைமையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை கல்வியமைச்சி எவ்வாறு வெளி மாகாணங்களுக்கு நியமிக்க முடியும். இது எந்த வகையில் நியாயமாகும். இதற்கான தீர்வு கிடைக்கும் வரை நான் கல்வி அமைச்சை விட்டு வெளியேறப்போவதில்லை என்றார்.

இதற்கமைவாக கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி, பிரதம ஆணையாளர் எச்.எம்.பாண்டார ஆகியோர்களுக்கிடையில் குறித்த ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று (17) இடம்பெற்றது.


இக்கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்வாக,
2016 இல் கல்வியியல் கல்லூரிகளில் கற்கையைப் பூர்த்திசெய்து, வெளிமாகாணங்களில் நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களையும் அம்மாகாணத்திலேயே நியமனம் வழங்கப்படும் எனவும் அவர்களுக்கான நியமனக் கடிதத்தில்  குறிப்பிட்டுள்ள தங்களின் கடமைகளை பொறுப்பேற்கும் பொருட்டு வழங்கப்பட்ட  இறுதித் திகதியான எதிர்வரும் 19 ஆம் திகதி புதன் கிழமைகயான கால எல்லையானது நீடிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


மேற்படி கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கமைவாக அவர்களுக்கான நியமனங்கள் மிக விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் செயினுலாப்தீன் நஸீர் அஹமட்
--
M.FAIZAL ISMAIL
தீர்வு கிடைக்கும் வரை வெளியேற மாட்டேன். முதலமைச்சர் நஸிர் அறிவிப்பு. தீர்வு கிடைக்கும் வரை வெளியேற மாட்டேன். முதலமைச்சர் நஸிர் அறிவிப்பு. Reviewed by Madawala News on 10/17/2016 03:55:00 PM Rating: 5