(படங்கள்) புல்மோட்டை கொக்கிளாய் ஆற்றில் முறையற்ற சுற்றிவளைப்பினால் கைகலப்பு .



ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

புல்மோட்டை கொக்கிளாய் ஆற்றில் புல்மோட்டை பிரதேச மீனவர்கள் தமது
அன்றாட இறால் மற்றும் மீன் பிடியில் 17.10.2016 ம் திகதி வழமை போன்று மீன்பிடியில் ஈடுபட்டு தமது வலைகளை ஆற்றில் இறால் பிடிப்பதற்காக நிறுத்தி வைத்திருந்த சமயம் முல்லைத்தீவுக்கு பொறுப்பாகவுள்ள மீன் பிடி திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பொலிஸார் சகிதம் குறித்த புளியமுனை, மாறியமுனை,கொக்கிளாய் மற்றும் குடாதாரை போன்ற பகுதிகளிலுள்ள மீனவர்களை இனைத்துக்கொண்டு சுற்றி வளைப்பை மேற்கொண்டபோது புல்மோட்டை பிரதேச மீனவர்கள் தமக்கு மட்டும் சட்டத்தை மேற்கொள்வதாகவும் மேற்குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சட்ட விரோத வலைகளையும் உபகரணங்களையும் பயன் படுத்தி மீன் பிடியில் ஈடுபடுவதை அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருப்பது தொடர்பில் தமக்கு மட்டுமே முல்லைத்தீவு மாவட்ட மீன் பிடி திணைக்கள அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவது தொடர்பில் குறித்த புல்மோட்டை மீன்பிடியாளர்கள் 06 பெயரை பொலிஸார் முல்லைதீவு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் ஆற்றில் இருந்த இரு பகுதி மீனவர்களுக்கும் கை கலப்பு ஏற்பட்டது.


பின்னர் அதனை அறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் .எம் .அன்வர் குறித்த ஆற்றுப்பகுதிக்குச் சென்று நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் குறித்த புல்மோட்டை மீனவர்களை ஆற்றுப்பகுதியில் இருந்து சுமூகமான முறையில் கரையை நோக்கி கொண்டு வந்தார் கரைப்பகுதிக்கு வந்த மாகாண சபை உறுப்பினர் ஆர் .எம் .முன்வரும் முன்னாள் உப தவிசாளர் தௌபீக்கும் புல்மோட்டை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நிலைமைகளை விளக்கினர்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குறித்த கடற்பரப்பில் முஸ்லீம் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களை சார்ந்த மீனவர்கள் கட்டு வலை தொழில் புரிந்து வருகின்றனர் அவ்வாறு இருக்கும்போது புல்மோட்டை மக்களுக்கு மாத்திரம் முல்லைத்தீவைச் சேர்ந்த மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் சட்டத்தை அமுல் படுத்துவது மற்றுமன்றி அடுத்த சமுகத்தை சார்ந்த மீனவர்களை இணைத்துக்கொண்டு சுற்றி வளைப்பில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயமானது?


எனவே அதிகாரிகள் சட்டத்தை அமுல் படுத்தும்போது அனைவருக்கும் சமமாக செயப்படுவதுதான் சிறந்தது இல்லாவிட்டால் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் ஏற்பட வாய்ப்புண்டு இது விடயமாக உரிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும் வெகு விரைவில் கடற்றொழில் அமைச்சரோடு சந்திப்பை மேற்கொள்வது மாத்திரமன்றி இரு சமூகங்களை சார்ந்த அரசியல் பிரமுகர்களோடு கலந்துரையாட உள்ளதாகவும் குறிப்பிட்டார்
(படங்கள்) புல்மோட்டை கொக்கிளாய் ஆற்றில் முறையற்ற சுற்றிவளைப்பினால் கைகலப்பு . (படங்கள்) புல்மோட்டை கொக்கிளாய் ஆற்றில் முறையற்ற சுற்றிவளைப்பினால்  கைகலப்பு . Reviewed by Madawala News on 10/17/2016 02:30:00 PM Rating: 5