Ad Space Available here

இதே நிலைமை தொடர்ந்தால் ஐக்­கிய தேசி­யக் ­கட்­சி­யையே அர­சாங்­கத்தை செய்­ய கூறிவிட்டு நாம் வெளியேறி விடுவோம்.ஐக்­கிய தேசி­யக்­கட்சி எம்மை தொடர்ந்து மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் நடத்­து­மானால் விரைவில் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறும் நிலைமை உரு­வாகும். இத­னைத்தான் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

 இது தொடர்பில் ஜனா­தி­பதி இரண்டு மஞ்சள் அட்­டை­களை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு காட்­டி­விட்டார். தற்­போது சிவப்பு அட்­டையை காட்­ட­வேண்­டி­யேற்­படும் என்ற எச்­ச­ரிக்­கையை ஜனா­தி­பதி விடுத்­தி­ருக்­கிறார் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

நாங்கள் தொடர்ச்­சி­யாக பொறு­மை­காத்­துக்­கொண்டே இருக்­கின்றோம். தற்­போது பொறு­மையின் எல்­லைக்கே வந்­து­விட்டோம். தொடர்ந்தும் நாம் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வோ­மாக இருந்தால் அர­சாங்­கத்தை நடத்­து­மாறு ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு கூறி­விட்டு சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­விடும் எனவும் டிலான் பெரேரா சுட்­டிக்­காட்­டினார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சில தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்பில் ஆற்­றிய உரை சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:- ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து நாட்டின் தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தன. இந்­நி­லையில் கூட்­ட­ர­சாங்கம் என்­பது இரண்டு தரப்­பி­னதும் புரிந்­து­ணர்­வுடன் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும்.

 அதா­வது இந்த அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் சம உரிமை இருக்­க­வேண்டும். இல்­லா­விடின் அதில் அர்த்­த­மில்லை.  ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் தேசிய அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆதிக்கம் செலுத்தி வரு­கி­றது.

 குறிப்­பாக இந்த விட­யத்தை நாங்கள் பல தடவை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றோம். ஆனால் எதுவும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை. அத­னால்தான் தற்­போது ஜனா­தி­பதி இவ்­வா­றான நட­வ­டிக்­கை­யொன்றை எடுத்­தி­ருக்­கிறார். அதா­வது சுதந்­தி­ரக்­கட்­சிக்கு காட்­டப்­படும் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யு­ட­னான அனு­கு­முறை தொடர்­பாக ஜனா­தி­பதி பல தட­வைகள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

ஆனால் அது தொடர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது கவ­னத்தில் கொள்­ள­வே­யில்லை. கால்­பந்து விளை­யாட்­டுடன் தொடர்­பு­ப­டுத்தி இதனை விளக்­கு­வது என்றால் ஜனா­தி­பதி ஜனா­தி­பதி இரண்டு தடவை மஞ்சள் அட்­டை­களை காண்­பித்தார்.

 ஆனால் அவை தொடர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி கவ­னத்தில் கொள்­ள­வே­யில்லை. இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே தற்­போது சிகப்பு அட்­டையை காட்­ட­வேண்­டி­வரும் என்ற எச்­ச­ரிக்­கையை ஜனா­தி­பதி விடுத்­தி­ருக்­கின்றார்.

அதா­வது சிகப்பு அட்­டையை வெளிக்­காட்டும் நிலைமை ஏற்­பட்டால் அடுத்த கனம் சுதந்­தி­ரக்­கட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­விடும். குறிப்­பாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யையே அர­சாங்­கத்தை செய்­யு­மாறு கூறி­விட்டு நாங்கள் வெளி­யே­றி­வி­டுவோம்.

 செய்­வதை சரி­யாக செய்­ய­வேண்டும். இல்­லா­விடின் வெளி­யே­றி­வி­ட­வேண்டும். இரண்டு மூன்று தடவை கூறிப்­பார்க்­கலாம். முடி­யா­விடின் வில­கிச்­செல்­வதே மேலாகும்.

கேள்வி:- எந்த விட­யங்­களில் சுதந்­தி­ரக்­கட்­சியை ஐக்­கிய தேசிய கட்சி புறக்­க­ணிப்­ப­தாக கரு­து­கி­றீர்கள்?

பதில்:- பல விட­யங்கள் உள்­ளன. குறிப்­பாக ஐக்­கிய தேசி­யக்­கட்சி எம்.பி.க்கள், தெரி­விக்­கின்ற விட­யங்கள், மத்­திய வங்கி விவ­காரம், அமைச்சர் பௌசிக்கு எதி­ரான நட­வ­டிக்கை, வரவு- செல­வுத்­திட்ட விவ­காரம் என பல்­வேறு விட­யங்­களை குறிப்­பிட்டுக் கூற முடியும். இவ்­வாறு எம்­மீ­தான புறக்­க­ணிப்­புக்­களை அடுக்­கிக்­கொண்டோ போகலாம். ஆனால் நாங்கள் பொறு­மை­யாக இருக்­கின்றோம்.

கேள்வி:- அப்­ப­டி­யாயின் சிகப்பு அட்டை காட்­டப்­ப­டுமா?

பதில்:- மாற்­றாந்தாய் மனப்­பான்மை தொடர்ந்தால் சிகப்பு அட்டை காட்­டப்­படும். வேறு வழி­யில்லை. சிகப்பு அட்­டையை காட்டும் அள­விற்கு நிலை­மையை கொண்­டு­செல்­லாமல் நடந்து கொள்­ளு­மாறு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை நாங்கள் கூறு­கின்றோம். புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பையில் பிர­தமர் மிகவும் விட்­டுக்­கொ­டுப்­பு­டனும் நேர்­மை­யான முறை­யிலும் நடந்து கொள்­கிறார். அதனைப் பாராட்­டு­கிறோம். ஆனால் கூட்­ட­ர­சாங்க செயற்­பாட்டில் நாம் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கிறோம் என்றார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி 106 ஆச­னங்­க­ளையும், ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ர­முன்­னணி 95 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. இந்­நி­லையில் எந்­த­வொரு கட்­சிக்கும் ஆட்சி அமைக்­கக்­கூ­டிய அறு­திப்­பெ­ரும்­பான்மை கிடைக்­காத கார­ணத்­தினால் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தன.

அதன்­படி இரண்­டு­வ­ரு­டங்கள் தேசிய அர­சாங்­கத்தை கொண்டு நடத்­து­வ­தற்­காக கடந்த வருடம் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் இரண்டு கட்­சி­களும் கைச்­சாத்­திட்­டி­ருந்­தன. அதன் பின்னர் அண்­மையில் மாத்­த­றையில் நடை­பெற்ற நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஒரு­வ­ருட பூர்த்­தி­வி­ழாவில் கருத்து வெளியிட்ட இரண்டு பிரதான கட்சிகளும் தேசிய அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு தொடரும் என்று கூறியிருந்தன.

 இந்நிலையிலேயே தற்போது சர்ச்சைக்குரிய நிலைமை தோன்றியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த வரவு-செலவுத் திட்டத்தில் தாம் முன்வைத்த யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் வரவு-செலவுத்திட்டத்தை சுதந்திரக்கட்சி எதிர்க்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே நிலைமை தொடர்ந்தால் ஐக்­கிய தேசி­யக் ­கட்­சி­யையே அர­சாங்­கத்தை செய்­ய கூறிவிட்டு நாம் வெளியேறி விடுவோம். இதே நிலைமை தொடர்ந்தால்  ஐக்­கிய தேசி­யக் ­கட்­சி­யையே அர­சாங்­கத்தை செய்­ய கூறிவிட்டு நாம் வெளியேறி விடுவோம். Reviewed by Madawala News on 10/15/2016 10:31:00 AM Rating: 5