tg travels

துமிந்த சில்வாவுக்கு சுகமில்லை.. திடீரென ஒரு காய்ச்சல்.



மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகவே அவர் இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 28ஆம் திகதி திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெய தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை நடவடிக்கைக்காக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கி அவர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கைது செய்யப்படும் அரசியல் பிரபலங்கள், சிறைச்சாலை சென்றதும் உடல் நலனில் கோளாறு ஏற்படுவதும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மாதக்கணக்கில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் சாதாரண விடயமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துமிந்த சில்வாவுக்கு சுகமில்லை.. திடீரென ஒரு காய்ச்சல். துமிந்த சில்வாவுக்கு சுகமில்லை.. திடீரென ஒரு காய்ச்சல். Reviewed by Madawala News on 10/01/2016 09:12:00 AM Rating: 5