Oceas

யானையிடம் சிக்கி பெண் பரிதாப பலி.



காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பொலன்னறுவை, கதுருவெல பிரதேசத்தில் வசிக்கு பெண் பலியாகியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை(04) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 64 வயது பெண் உயிரிழந்துள்ளதுடன், அவரது வீட்டில் வைத்து காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

 குறித்த காட்டு யானை பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட பின்னர், கதுருவெல நகரத்தில் உள்ள பாடசாலையில் மதிலுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளது.

திவுலான காட்டுப்பகுதியில் இருந்து வந்ததாகக் கூறப்படும் இந்த காட்டு யானை, பின்னர் பொலன்னறுவை கல்லுல்ல காட்டுப்பகுதியை நோக்கிச் சென்றுள்ளதாக யானையைக் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
wana-ali-www-nethnews-lk00006wana-ali-www-nethnews-lk00005
யானையிடம் சிக்கி பெண் பரிதாப பலி. யானையிடம் சிக்கி பெண் பரிதாப பலி. Reviewed by Madawala News on 10/04/2016 01:58:00 PM Rating: 5