Free Space

தீயில் எறிந்த நிறுவனம்.. விஷமிகளினால் மேற்கொள்ளப்பட்ட அசம்பாவிதம் என தகவல்கள் வெளியாகின.



வரையறுக்கப்பட்ட ஏப்பாவல அரச பொஸ்பேட் நிறுவன காரியாலயத்தின் ஒரு பகுதியில், கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட தீச் சம்பவம் இயற்கையானது அல்லவெனவும், சில விஷமிகளினால் மேற்கொள்ளப்பட்ட அசம்பாவிதம் எனவும் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் மேலதிக இரசாயனப் பகுப்பாய்வாளர் ஆரியனந்த வெலி அங்ககேயினால் இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட தீயினால் உள்ளக கணக்குப் பிரிவு, விநியோகப் பிரிவு, பதிவாளர் பிரிவு மற்றும் ஊழியர் ஓய்வு அறை என்பன முழுமையாக அழிவுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசாங்க காலத்திலிருந்த நிருவாகத்தினால் முன்னெடுக்கப்பட்ட முகாமையாளரினால் இடம்பெற்றதாக கூறப்படும் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய முக்கிய தகவல்கள் அழிவுற்றுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அனுராதபுர பிரிவுக்குப் பொறுப்பான குற்றப்புலனாய்வுப் பிரிவு பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். D C
தீயில் எறிந்த நிறுவனம்.. விஷமிகளினால் மேற்கொள்ளப்பட்ட அசம்பாவிதம் என தகவல்கள் வெளியாகின. தீயில் எறிந்த நிறுவனம்.. விஷமிகளினால் மேற்கொள்ளப்பட்ட அசம்பாவிதம் என தகவல்கள் வெளியாகின. Reviewed by Madawala News on 10/10/2016 06:49:00 AM Rating: 5