Free Space

மிகப்பெரிய கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது.. கடத்தியவர்கள் எங்கே?



யாழ். - இளவாலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்படி இளவாலை - மாதகல் பகுதியில் 130.68 கிலோகிராம் கஞ்சா இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து மாதகல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக இரகசிய தகவல் கிடைக்கப் பெற்று, யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வு பொலிஸார் அங்கு சென்றனர்.

இதன்போது, கடத்தலில் ஈடுபட்ட இருவரும் கஞ்சாவை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இவற்றின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா, இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கடத்தியவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
மிகப்பெரிய கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது.. கடத்தியவர்கள் எங்கே? மிகப்பெரிய கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது.. கடத்தியவர்கள் எங்கே? Reviewed by Madawala News on 10/15/2016 09:35:00 AM Rating: 5