மடவளை அல்முனவ்வரா மற்றும் கும்புக்கந்துரை அல்ஹிக்மாவில் புலமை பரிசில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள்..



இன்று(14/10/2016) கண்டி மாவட்ட மடவளை அல் முனவ்வரா மற்றும் கும்புக்கந்துரை அல்ஹிக்மா கல்லூரிகளில், 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் (சித்தியடைந்தோர், சித்தியடையாதோர் என்ற பாரபட்சமின்றி) அவர்களின் எதிர்கால கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் மடவளை பசார் இன்ஷாப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மடவளை அபு ஹாஜியார் அவர்களால் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வுகளில் - வத்தேகமை கல்விப் பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் - திருமதி நீதிராஜா அவர்களும், வத்தேகமை கல்விப் பணிமனையின் செயல்திட்ட அதிகாரியும் முறைசாராக் கல்வி அதிகாரியுமான திருமதி ஜயவர்தன அவர்களும், சமூக சேவையாளரும் இந்த ஏற்பாட்டை செய்தவருமான அபு ஹாஜியாரும், மடவளை இன்ஷாப், மடவளை சன்சப்ரி ஆகியோரும்  கலந்துகொண்டனர்.














மடவளை அல்முனவ்வரா மற்றும் கும்புக்கந்துரை அல்ஹிக்மாவில் புலமை பரிசில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள்.. மடவளை அல்முனவ்வரா மற்றும் கும்புக்கந்துரை அல்ஹிக்மாவில் புலமை பரிசில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள்.. Reviewed by Madawala News on 10/14/2016 02:03:00 PM Rating: 5