Accaddemy

ரணில் விக்கி­ர­ம­சிங்­கவை நீக்கி விட்டு சுதந்­திரக் கட்­சி ஒருவரை உட­ன­டி­யாக பிர­த­ம­ராக்கவும்.



ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் கொள்­கை­யினை நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசிய கட்சி புறக்­க­ணிக்­கின்­றது. எனவே ரணில் விக்கி­ர­ம­சிங்­கவை நீக்கி விட்டு சுதந்­திரக் கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஒரு­வரை உட­ன­டி­யாக பிர­த­ம­ராக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி தெரி­வித்­துள்­ளது.

வட மாகாண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதிராக எவ்­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­டாத நிலையில் நல்­லாட்சி அர­சாங்கம் கூட்டு எதிர்க்கட்­சியின் பாத­யாத்­தி­ரை­க­ளுக்கும் கூட்­டங்­க­ளுக்கும் தடை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. ஆனால் மக்கள் எம்­முடன் இருக்­கின்­றனர் என்­பதை மறந்து விட வேண்டாம் என்றும் கூட்டு எதி­ரணி குறிப்­பிட்­டுள்­ளது.

பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள மஹிந்த ராஜ­பக்ஷ அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இதன் போது உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜானக வக்­கும்­புர கூறு­கையில்

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­யா­கவே செயற்­ப­டு­கின்­றது. ஆனால் மக்கள் விடு­தலை முன்­னணி அர­சாங்­கத்தை பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் விமர்­சிக்­கின்ற நிலையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆட்சி பீடம் ஏற்­று­வ­தற்­காக அன்று துணைச்­செய்­தது. எவ்­வா­றா­யினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறும் விட­யங்கள் அமைச்­ச­ர­வையில் உள்­வாங்­கப்­ப­டு­வ­தில்லை. அவ­ரது வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை.

உதா­ர­ண­மாக சிக­ரட்டின் விலை அதி­க­ரிப்பை பல முறை வலி­யு­றுத்­தியும் கவ­னத்தில் கொள்­ளாத நிலையில் தற்­போது 7 ரூபாவால் அதி­க­ரித்­துள்­ளனர். 2017 ஆம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்­டாக ஏற்­க­னவே ஜனா­தி­பதி அறி­வித்­துள்ள நிலையில் தற்­போது வேறு அறி­விப்­பு­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.

எனவே ஜனா­தி­ப­தியின் திட்­டங்கள் உள்­வாங்­கப்­ப­டாத நிலையில் பிர­தமர் பத­வியில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பினர் ஒரு­வரை நிய­மிக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

மக்கள் எம்­முடன் இருக்கின்றனர். எனவே தான் 8 ஆம் திகதி பேரணிக்கு தடை விதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது.

அனைத்து தடைகளும் கூட்டு எதிர் கட்சிக்கு எதிராகவே முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு முதலமைச்சருக்கு எதிராக வாயை திறப்பதே இல்லை என்றார்.
ரணில் விக்கி­ர­ம­சிங்­கவை நீக்கி விட்டு சுதந்­திரக் கட்­சி ஒருவரை உட­ன­டி­யாக பிர­த­ம­ராக்கவும். ரணில் விக்கி­ர­ம­சிங்­கவை நீக்கி விட்டு சுதந்­திரக் கட்­சி ஒருவரை உட­ன­டி­யாக பிர­த­ம­ராக்கவும். Reviewed by Madawala News on 10/07/2016 10:25:00 AM Rating: 5