Tuesday, October 18, 2016

கல்குடாத் தொகுதி விவசாயப் பகுதிகளும்,முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களும்.. ( நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை)

Published by Madawala News on Tuesday, October 18, 2016  | - செம்மன்னோடை சலீம் -

கல்குடாத் தொகுதி விவசாயப் பகுதிகளும்,முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களும்

1.வாகனேரி கிராம சேவகர் பிரிவு - பிரதேச செயலகம் -கோறளைப்பற்று தெற்கு - கிரான்,
பிரதேச சபை - கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி
விவசாயக் கண்டங்கள்-கிராமங்கள்
1.மக்குளானை - பருதிச்சேனை
2.ஒட்டு வெளி
3.பட்டியடிவெளி
4.தவணை 100 ஏக்கர்
5.முருக்கந்தீவு-சேம்பையடி
6.அடம்படி வட்டவான்
7.முள்ளிவட்டவான்
8.கல்வளை

2.புணாணை மேற்கு கிராம சேவகர் பிரிவு
விவசாயக் கண்டங்கள் - கிராமங்கள்


1.புணாணை - மயிலந்தனை
2.பொத்தானை - பூலாக்காடு
3.கிடச்சிமடு
3.ஊத்துச்சேனை கிராம சேவகர் பிரிவு
விவசாயக் கண்டங்கள் - கிராமங்கள்
1.ஊத்துச்சேனை
2.ஆத்துச்சேனை
3.அதிகாரிவில்
4.கள்ளிச்சை கிராம சேவகர் பிரிவு
1.கள்ளிச்சை
5.வடமுனை கிராம சேவகர் பிரிவு
1.வடமுனை
6.முறுத்தானை கிராம சேவகர் பிரிவு
1.காரையடிப்பட்டி
2.காஞ்சிலங்காடு
3.மினுமினுத்தவெளி
4.சின்னக் கோங்குளை
5.பெரிய கோங்குளை
6.கமவட்டவான்
7.சுரிச்சவெட்டி
8.அக்குறாணை
9.படுகாடு
10.ஆனைவணங்கி
7.புணாணை கிழக்கு கிராம சேவகர் பிரிவு

கோறளைப்பற்று வடக்கு - வாகரை

பிரதேச செயலகம்,பிரதேச சபை
1.வெள்ளாமைச்சேனை
2.காரமுனை
3.கிருமிச்சை
4.ஆலங்குளம்
5.மதுரங்குளம்
6.காணிக்கை வேப்பையடி
7.மாங்கேணி
8.குஞ்சங்குளம்
9.ஓமணியாமடு
10.ஆனைக்காடு
11.முள்ளிச்சேனை
மேலே குறிப்பிடப்படும் கண்டங்கள் அல்லது கிராமங்களில் கல்குடா முஸ்லிம் சமூகம் பாரிய சவால்களை,பிரச்சனைகளை நாளாந்தம் எதிர்நோக்குகின்றனர்

1.1980 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் போராட்ட இயக்கங்கள் செயற்படத் தொடங்கிய காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடியும் வரை அந்த இயக்கங்களின் கட்டுப்பாட்டில் அந்தந்தக் கிராமங்கள்,நிலபுலன்கள் இருந்ததன் காரணமாக முஸ்லிம் சமூகம் அந்தக் கிராமங்களை விட்டு வெளியேறியும்,வெளியேற்றப்பட்டும் இருந்தனர்.

2.காணி ஆவணங்கள் அனைத்தும் எரிந்தும்,காணாமல் தொலைந்தும் உள்ளன.இவற்றை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகம் அத்துமீறிய காணி பிடித்தவர்களாகவும்,பிடிப்பவர்களாகவும்,சுமார் 35,30 வருடங்களாக அந்த காணிகளில் பெரும்பகுதி காடுகளாகவும் மாறியுள்ளமையால் அந்தக் காணிகளில் தங்களது வேலைகளை மீளச் சென்று ஆரம்பிக்கும்போது கிராம சேவை உத்தியோகத்தர்கள்,காணி உத்தியோகத்தர்கள்,வனவள அதிகாரிகளால் முஸ்லிம் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.

3.சட்டவிரோத காணி பராமரிப்பவர்களாகவும்,சட்ட விரோத விவசாயிகளாகவும், அடையாளப்படுத்தப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு குளங்கள்,சிறிய ஆறுகள்,வாய்க்கால்கள்,நீர் அணைத்தடுப்புக்கள்,அணைக்கட்டுகள்,மதகுகள்,சிறிய பாலங்கள்,வீதிகள் என்று அனைத்து அபிவிருத்திகள் தொடர்பில் தவறான,பிழையான அறிக்கை கொடுக்கப்பட்டும் அல்லது புறக்கணித்தும்  அதனால்விவசாயப் பகுதிகளும்,விவசாயிகளும்
அபிவிருத்திகள் செய்யப்படாமல் பாரிய பிரச்சனைகளை தொடர்ந்தேர்ச்சியாக எதிர்நோக்குகின்றனர்.

4.அலுவலகங்களில் சட்டதிட்டங்களை அதற்கு சாதகமாகப் பயன்படுத்தி தொடர்ந்தேர்ச்சியாக அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு,இழுத்தடிப்புக்கள் செய்யப்படுகின்றன.அதனால் உளவியல் ரீதியாக,உடலியல் ரீதியாக தோல்வி அடைந்து அவர்களது நகர்வுகள் முடக்கப்படுகின்றன.

5.எனவே அனைத்து மக்களுக்குமான மனிதாபிமான நடவடிக்கைகளில் நேரடியாக அனைத்து அரசியல் தலைமைகளும் கைகோர்த்து களத்தில் இறங்கி அந்தந்தப் பிரதேசங்களில் ஒரு காத்திமான நடமாடும் சேவைகள் ஊடாக உடனுக்குடன் முடியுமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதும்,அந்தப் பிரதேசங்களை அதிகாரிகளுடன் தரிசிப்பதும்தான் தீர்வுகளை நோக்கி நகர்த்தும்.

எனவே தொடர்புபட்ட அனைவரும் கவனம் செலுத்துமாறு பாதிக்கப்பட்ட சமூகத்தின் சார்பில் வேண்டுகின்றேன்.அழைக்கின்றேன்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top