Free Space

(படங்கள்) கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி.. அம்பாறை மாவட்டம் அசத்தல்.




ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி கிழக்கு மாகான சம்மேளன தலைவர் முகம்மத் இக்பால் தலைமையில் நேற்று 14.10.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் இருநூறு வீரர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் அம்பாறை மாவட்டம் அதிக பதக்கங்களை பெற்றுக்கொண்டது.

இப்போட்டியானது ஆறு வயது தொடக்கம் பதின்மூன்று வயதுவரையான Sub Junior, 14/15 வயதுடைய Cadet பிரிவு,  16/17 வயதுடைய Junior, மற்றும் 21 வயதுக்கு கீழ்பட்டவர்களும், 21 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரிவினர்கள்

கிலோ அடிப்படையிலும் இப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆகிய இடங்களை பெற்ற வீரர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய கராத்தே போட்டியானது எதிர்வரும் 25,26,27,28/10/2016 ஆகிய திகதிகளில் கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

(படங்கள்) கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி.. அம்பாறை மாவட்டம் அசத்தல். (படங்கள்) கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி.. அம்பாறை மாவட்டம் அசத்தல். Reviewed by Madawala News on 10/15/2016 07:01:00 PM Rating: 5